deepamnews
இலங்கை

மன்னார் கடல் பகுதியில் மீட்கப்பட்ட தங்கம்-சந்தேகநபர்கள் தப்பியோட்டம்.

மன்னார் கடல் பகுதியில் படகு ஒன்றிலிருந்து சுமார் 8 கிலோ தங்க கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மன்னார் கடல் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு தங்க கட்டிகளை கடத்துவதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ரோந்து பணியில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்துக்கிடமாக அதி வேகமாக வந்த படகை நிறுத்த முற்பட்ட போது படகில் இருந்தவர்கள் படகை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றுள்ளனர்.

இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகநபர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அவர்கள் படகை விட்டு தப்பி ஓடியுள்ளனர்.

பின்னர் விட்டு சென்ற படகில் இருந்து 8 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் 5 கோடிக்கும் மேலான மதிப்புடையவை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கொழும்பை சுற்றி வளைத்து ஜனாதிபதியை சிறைபிடிப்போம்  – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை

videodeepam

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுக்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம்

videodeepam

சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என்கிறது லிட்ரோ நிறுவனம்

videodeepam