deepamnews
இந்தியா

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அழகிரி வலியுறுத்தல்.

இலங்கைத் தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்..அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு அமைய வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு, ஒரே மாநில நிர்வாக சுயாட்சியுடன் கூடிய அரசு உருவாக வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்தவும் இலங்கை திட்டமிட்டுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கும் வகையில், 13 ஆவது அரசியலமைப்பு  திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த  பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் இன்று – தலைமை கழக வளாகத்தில் நல்லடக்கம்!

videodeepam

பொலிஸ் அதிகாரியால் சுடப்பட்ட ஒடிசா அமைச்சர் சிகிச்சைப் பலனின்றி மரணம்

videodeepam

படகுகளை மீட்க தமிழக அரசு தலையிட வேண்டும் – தமிழக கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

videodeepam