deepamnews
இலங்கை

அடுத்த மாதம் முதல் எரிபொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்.

அடுத்த மாதத்தில் இருந்து எரிபொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நிறுவனங்கள் தமது தீர்மானத்திற்கமைய அதிகபட்ச சில்லறை விலைக்கு உட்பட்டு எரிபொருளை விற்பனை செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் முதல் இரண்டு எரிபொருள் ஏற்றுமதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலிய இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், இந்த ஆண்டு மே மாதம் சினோபெக் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் செய்து கொண்டது.

புதிய ஒப்பந்தத்தின் கீழ் சீன நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்க 20 ஆண்டு உரிமம் வழங்கப்படும் மற்றும் 50 புதிய எரிபொருள் நிலையங்களில் முதலீடு செய்யவும் முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related posts

கோட்டாபயவை ஆட்சியில் அமர்த்தவே ஈஸ்டர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவிப்பு

videodeepam

உலகில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் கொழும்பு நான்காமிடம்

videodeepam

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

videodeepam