deepamnews
சர்வதேசம்

22 வருடங்களில் இல்லாத அளவு வட்டி வீதத்தை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி.

அமெரிக்காவின் மத்திய வங்கி (Federal Reserve Bank) ஒவ்வொரு காலாண்டும் அடிப்படை வட்டி வீதத்தை நிர்ணயிக்கும்.

அமெரிக்காவின் பணவீக்கம் 3 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது. இதனை 2 சதவீதத்திற்கும் கீழே கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கி பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கியின் அடிப்படை வட்டி புள்ளிகளை 0.25% அதிகரித்துள்ளது. இதன் மூலம் 2001-ஆம் ஆண்டிற்கு பிறகு 22 வருடங்களாக எப்போதும் இல்லாத வகையில், இந்த வட்டி வீதம் அமைந்திருக்கிறது.

கால் சதவீத உயர்வு என்பது வங்கிகளின் கடன் வட்டி வீதத்தை 5.25%-லிருந்து 5.5% வரை கொண்டு செல்லும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

ரஷ்யா மீதான 400க்கும் அதிகமான யுத்த குற்றங்கள் விசாரணை அதிகாரிகளிடம் உள்ளதாக உக்ரைனின் ஜனாதிபதி தெரிவிப்பு

videodeepam

அகதிகளை மோசமாக நடத்தும் ஆஸ்திரேலியா –  சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கை

videodeepam

அமெரிக்க  வெள்ளை மாளிகை அருகே திடீர் தீ விபத்தால் பரபரப்பு

videodeepam