deepamnews
சர்வதேசம்

ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் குழுத் தலைவர் விமான விபத்தில் பலி!

கடந்த ஜூன் மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக சாத்தியமற்ற ஒரு சதிப்புரட்சிக்கு தலைமை தாங்கிய வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

விமானத்தில் பயணித்தவர்களின் பட்டியலில் எவ்ஜெனி ரிகோஜினும் இருந்ததாக ரஷ்ய சிவில் விமான போக்குவரத்து ஆணையம் கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு சென்ற விமானம் விபத்துக்குள்ளானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று பணியாளர்கள் உட்பட விமானத்தில் இருந்த 10 பேரும் விபத்தில் உயிரிழந்துள்ளனர் என ரஷ்யாவின் அவசர அனர்த்த மேலாண்மை அமைச்சகம் கூறியுள்ளது என உள்நாட்டு செய்தித் சேவையான நோவோஸ்டி தெரிவித்துள்ளது.

மேலதிக விவரங்கள் எவற்றையும் பகிர்ந்து கொள்ளாமல், விமான பயணிகளில் யெவ்ஜெனி ப்ரிகோஜின் என்ற பெயருடன் ஒரு நபர் இருப்பதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த ஜெட் விமானம் வாக்னர் தனியார் இராணுவ நிறுவனத்தின் நிறுவனர் பிரிகோஜினுக்கு சொந்தமானது என்று உறுதிப்படுத்தப்படாத ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் பொது விமான சேவைகள் ஆணையகமான ரோசாவியாட்சியாவின் தகவல்களின் படி, ப்ரிகோஜின் பயணிகள் பட்டியலில் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் அவர் விமானத்தில் ஏறினாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

அமெரிக்காவின் பொருளாதார  தடை நடவடிக்கைக்கு ரஷ்யா பதிலடி

videodeepam

33 தடவை டைட்டானிக் சிதைவுகளை நோக்கி சென்றேன் – ஜேம்ஸ் கமரூன் தெரிவிப்பு.

videodeepam

இத்தாலியின் பிரதமராகிறார் இரும்புப் பெண் ஜோர்ஜியா மெலோனி

videodeepam