deepamnews
இலங்கை

இலங்கையை வந்தடைந்த தென்கொரிய போர் கப்பல்..

தென்கொரிய கடற்படைக்கு சொந்தமான ‘குவாங்கெட்டோ தி கிரேட்’ என்ற போர்க்கப்பலானது இலங்கையை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலானது இன்றுகொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. தெற்காசிய பங்குதாரர்களுடன் தி இந்தோ-பசிபிக் மூலோபாயத்தின் கீழ் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்வதாக தென் கொரிய கடற்படை தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்த கப்பல் கொரிய கடற்படையின் கடற்கொள்ளை எதிர்ப்பு பிரிவுக்கு சொந்தமானதுடன் கூட்டு பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்படுகின்றது.

தென் கொரிய போர்க்கப்பல் ஒன்று 6 வருடங்களுக்கு முன்பு கடைசியாக 2017 ஒக்டோபரில் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த கப்பல் நங்கூரமிடப்படும் போது இலங்கைக்கான கொரிய தூதுவர் மற்றும் பலர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உள்ளூராட்சி தேர்தலிற்கான போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்கிறார் அனுரகுமார திசநாயக்க

videodeepam

கூரிய ஆயுதங்கள் சகிதம் கணவனால் கடத்தப்பட்ட மனைவி – குடத்தனையில் சம்பவம்!

videodeepam

கால்நடைகள் உயிரிழப்பால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள வடக்கு, கிழக்கு மக்கள்

videodeepam