deepamnews
இலங்கை

வெடுக்குநாறிமலையில் கைதானவர்களை விடுவிக்கக் கோரி நெடுங்கேணியில் நாளை போராட்டம்.

மகா சிவராத்திரி தினமன்று வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதான 8 பேரையும் விடுவிக்கக் கோரி நாளை வெள்ளிக்கிழமை நெடுங்கேணியில் மாபெரும் போராட்டத்துக்கு ஆலய பரிபாலன சபைத் தலைவர் செல்லத்துரை சசிகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,

“08.03.2024 அன்று எமது வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் மகா சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த எமது ஆலயத்தின் பரிபாலன சபையின் நிர்வாகிகள் மீதும், சிவ பக்தர்கள் மீதும் பொலிஸார் நடத்திய வன்முறைகளை எதிர்த்தும், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவபக்தர்களை விடுவிக்கக் கோரியும் பாரியளவிலான வெகுஜனப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம்.

நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நெடுங்கேணி சந்தியில் ஆரம்பிக்கும் இந்தப் போராட்டமானது, வவுனியா வடக்கு பிரதேச செயலகம் வரைக்கும் பேரணியாகச் சென்று, இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மற்றும் இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்கான மகஜர் கையளிக்கப்படும்.

அரச அநீதிக்கு எதிரான இந்தப் போராட்டத்தில், அனைத்துத் தமிழ் மக்களையும், சமயம் சார்ந்த அமைப்புக்களையும், தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ் உணர்வாளர்களையும், சிவில் சமூகத்தினரையும், பல்கலைக்கழக மாணவர்களையும், ஊடகங்களையும் கலந்துகொள்ளுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் விஷேட உரை இன்று.

videodeepam

கிளிநொச்சியில் ஆளுநர் தலைமையில் காணிகளின் பயன்பாடு தொடர்பில் கலந்து உரையாடல்

videodeepam

அரச ஊழியர்களின் சம்பளத்தை பறிப்பது சரியா – சஜித் பிரேமதாச கேள்வி

videodeepam