சர்வதேச நாணய நிதியம் மற்றும் இலங்கைக்கு இடையில் நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான இரண்டாம் மீளாய்வு நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான பொருளாதார கொள்கைகள் தொடர்பான ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, நிறைவேற்றுச் சபையின் மீளாய்வுக்கு பின்னர் இலங்கைக்கு 337 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடன் திட்டத்தின் நியதிகளுக்கு அமைய, உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடனான ஒப்பந்தங்களை நிறைவு செய்தலும் பிரதான தனியார் கடன் வழங்குநர்களுடன் கொள்கை அளவிலான ஒப்பந்தங்களை எட்டுவதும் இலங்கைக்கு முக்கியமானது என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.