deepamnews
இலங்கை

தேவையில்லாமல் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அலிசப்ரி சீற்றம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையானது நாட்டின் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் தலையிடுவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

பொருளாதார குற்றங்களுக்கு யாரேனும் பொறுப்புக் கூறினால் அவர்கள் மீது நாட்டின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே ஐ.நா.ஆணையாளர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார குற்றங்கள் என்ற சொல்லை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையானது இலங்கையை முன்னோக்கி நகர்த்துவதற்கு இடமளிக்காமல் பலவந்தமாக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் வைத்திருப்பதாக அலி சப்ரி கடுமையாக சாடியுள்ளார்.

பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து இலங்கைக்கு கல்வி கற்பிப்பதற்கான நிபுணத்துவம் மனித உரிமைகள் பேரவைக்கு இருந்தாலும் அது குறித்து சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் நிபுணர்களுடன் இலங்கை கலந்துரையாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புகையிரத அட்டவணையில் புதிய மாற்றம்

videodeepam

வங்கி முறைமைக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் ஜனாதிபதி – அனுரகுமார திஸாநாயக்க குற்றசாட்டு

videodeepam

பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையை வழங்குவது அரச அதிகாரிகளின் பொறுப்பு – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

videodeepam