தங்களது கோரிக்கைகளை 7 நாட்களுக்குள் அரசாங்கம் நிறைவேற்றாவிட்டால் அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட போவதில்லை என்ற நிலைப்பாட்டை தமிழ் கட்சிகள் எட்டியுள்ளன.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு உள்ளிட்ட தமிழ் தேசிய கட்சிகளுக்கும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இதன்போது கலந்துரையாடப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பு இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று இடம்பெற்றது.
இதில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரனும் பங்கேற்றிருந்தார்.
இந்தநிலையில் இன்றிய சந்திப்பில் நில அபகரிப்பு மற்றும் அரசியல் யாப்பில் உள்ள மாகாணங்களுக்கான அதிகாரங்களை அமுலாக்குதல் உள்ளிட்ட 3 விடயங்களை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகள் 7 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.