deepamnews
இலங்கை

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 25ஆம் திகதி – மனோ கணேசன் தெரிவிப்பு

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான பிரேரணை எதிர்வரும் 25ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் எட்டப்பட்ட நிபந்தனைகள் மற்றும் உடன்படிக்கையையும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் முன்வைப்பார் என அவர் குறிப்பிடுகின்றார்.

தேசிய அரசாங்கம் அமைக்கும் பிரேரணையில் தானும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலன்று வெளியாகும் ஆதாரங்கள் – பிரித்தானிய தமிழர் பேரவை அறிவிப்பு

videodeepam

திடீரென சரிந்த டொலரின் பெறுமதி

videodeepam

வெடுக்குநாறி ஆலய வழக்கில் இருந்து, ஆலய நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை

videodeepam