deepamnews
இலங்கை

இலங்கையில் மின் கட்டண அதிகரிப்பு யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நேற்று அனுமதி கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மீள் பரிசீலனையின் போது மீண்டும் மின் கட்டணம் குறைவடைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் கூறினார்.

இதனிடையே, மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான யோசனை நேற்று மாலை கிடைக்கப்பெற்றதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது என்கிறது அரசாங்கம்

videodeepam

நாடுமுழுவது பாதுகாப்பு அதிகரிப்பு- பொலிஸ்மா அதிபர் அதிரடி உத்தரவு

videodeepam

மக்கள் விரட்டியடித்த நபர்களைத் தலைவராக ஏற்க முடியாது – சஜித் பிரேமதாச தெரிவிப்பு.

videodeepam