deepamnews
இலங்கை

தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளது என்கிறது அரசாங்கம்

நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒரு சில தொழிற்சங்கங்கள் மாத்திரமே தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், பணிப்பகிஷ்கரிப்பு முழுமையாக செயற்படுத்தப்படவில்லை என ஜனாதிபதியின் தொழிற்சங்கங்களுக்கான பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ள போதிலும், அத்தியாவசிய சேவைகள் உரியவாறு இடம்பெறுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

சிற்றுண்டிச்சாலைகளில் அரிசி மா உணவுகளின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டம்

videodeepam

ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் எவ்வித பயனுமில்லை – கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தெரிவிப்பு

videodeepam

77 கோடி ரூபாவுக்கு நிதியமைச்சிலிருந்து பதில் இல்லை – தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு

videodeepam