deepamnews
இலங்கை

ஐம்பது மதுபான கடைகளின் உரிமங்கள் தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட ஐம்பது மதுபான கடைகளின் உரிமங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவை மீண்டும் வழங்கப்படுவதற்கு அல்லது இரத்து செய்யப்படுவதற்கு முன்னர் மறுபரிசீலனை செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தலை முன்னிட்டு அரசியல் தொடர்புகள் மூலம் பல்வேறு மட்டத்தினருக்கு இந்த 50 உரிமங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் குறித்த உரிமங்களைப் பெற்ற பலர் அவற்றை இரத்து செய்ய வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை உரிமம் பெற விரும்புவோருக்கு புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படவுள்ளன.

மதுபான கடைகளை திறப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில், இந்த வழிகாட்டுதல்களின்படி விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது.

புதிய உரிமங்கள் வழங்கப்படுவதற்கு முன்னர் குடியிருப்பாளர்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளின் அமைவிடங்கள் கருத்தில் கொள்ளப்படும் என்றும் அரச தரப்பு தெரிவித்துள்ளது.

Related posts

பங்களாதேஷுக்கு 50 மில்லியன் டொலரை மீள செலுத்தியது இலங்கை

videodeepam

தேவையில்லாமல் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் – அலிசப்ரி சீற்றம்

videodeepam

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வு பணி ஆரம்பம்..!

videodeepam