தாபன கோவை விதிகளைப் பின்பற்றாமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தும் அரச அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் எச்சரித்துள்ளது.
பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் நேற்று இதுகுறித்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தாபன கோவை பிரிவு 6 மற்றும் 7, அத்தியாயம் 57I, தொகுதி Il இன் விதிகளைப் பின்பற்றாமல், அரச அதிகாரிகள் சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்துவது, ஒழுக்காற்று நடவடிக்கைக்கு வழிவகுக்கும் ஒரு குற்றமாகும் என்று அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அரசியல் உரிமைகளைப் பயன்படுத்துவதற்குத் தகுதியற்ற அரச துறை அதிகாரிகள், அரசியல் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.