deepamnews
இலங்கை

13 வது திருத்தச்சட்டம் தொடர்பில் சிங்கள மக்கள் அச்சம் கொள்ளதேவையில்லை – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் சகோதர சிங்கள மக்கள் அச்சம் கொள்ளவேண்டியதில்லை.

மாகாணசபை முறைமை என்பது வடக்கு, கிழக்குக்கு மட்டும் உரித்தானது அல்ல. நாட்டில் ஏனையப் பகுதிகளில் உள்ள மக்களும் அந்த முறைமையின் ஊடாக சிறந்த சேவையைப் பெறலாம் என்று இலங்கை தொழிலார் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அக்கிராசன உரையானது காலத்தின் கட்டாய தேவையாகும். அதிலுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்கும் எனவும் அவர் கூறினார்.

யட்டியாந்தோட்ட எக்கலாஸ் கீழ்பிரிவு தோட்டத்தில் முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான அண்ணாமலை பாஸ்கரன் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு நேற்று  இடம்பெற்றது.

இச்சந்திப்பில் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் கலந்து கொண்டார்.

Related posts

ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்

videodeepam

பொதுநலவாய அமைப்பு விரிவான திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியம் – ஜனாதிபதி கோரிக்கை

videodeepam

அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தத்தின் பாரத்தை இலங்கை தொடர்ந்து உணர்கிறது – பொதுநலவாய செயலாளர் தெரிவிப்பு

videodeepam