இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும், இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது, ஜதராபாத் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பின் போது, இலங்கை மற்றும் இந்திய மீனவர்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தமது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சியை எளிதாக்குவதற்கான ஒத்துழைப்பு குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
முதலீடு, வர்த்தகம் மற்றும் கூட்டாண்மை மேம்பாடு குறித்தும் இருநாடுகளினதும் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.