deepamnews
இலங்கை

இந்தியாவில் இருந்து முட்டைகளை  இறக்குமதி செய்வதில் தாமதம் –  ஆசிறி வலிசுந்தர இந்தியா பயணம்

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து விசாரிப்பதற்காக அரசு வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் மற்றும் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பான அறிக்கையை சரி பார்ப்பதே இந்த விஜயத்தின் நோக்கமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நாட்டில் முட்டையின் விலையை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், முதல் தொகுதியாக 02 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட முட்டைகளுக்கு இந்திய விலங்குகள் மற்றும் சுகாதாரத் துறை வழங்கிய தரநிலை அறிக்கை இன்னும் வரவில்லை என்று அரசாங்க வணிக இதர சட்டப்பூர்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேரடியாக ஆராய்ந்து முட்டைகளை விரைவில் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அரசாங்க வர்த்தக இதர சட்டப்படுத்தப்பட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர இந்தியா சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழு அசமந்தம்.

videodeepam

தேசிய நல்லிணக்கம் தொடர்பில் புதிய நடவடிக்கை: வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தகவல்

videodeepam

இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பிற்காக செல்ல காத்திருக்கும் மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

videodeepam