அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சுபீட்ச கொடுப்பனவுகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மேலும் சிறப்பு மேலாண்மை திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டை முன்னிட்டு இந்த கொடுப்பனவுகளை வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதற்கு சுமார் 140 பில்லியன் ரூபா செலவாகும் என்பதுடன், தேவைப்பட்டால், நிதியமைச்சில் கணக்குகள் மற்றும் வங்கி மிகைப்பற்றுக்களை நிர்வகித்து சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.