deepamnews
இலங்கை

பிரதமரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சரும் பிரதமருமான தினேஷ் குணவர்தனவை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கோரியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வேட்பாளராக களமிறங்கியுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் இங்கு அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவை அழைத்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Related posts

இலங்கைக்கான பயண ஆலோசனை – தவறான செய்தி குறித்து நியூஸிலாந்து விளக்கம்

videodeepam

அமைச்சுக்களின் பொறுப்பற்ற செயலால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – ஜனாதிபதி

videodeepam

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு – கரிநாளாக பிரகடனம்

videodeepam