deepamnews
இலங்கை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

எரிபொருள் விலை திருத்தம் இன்று இரவு 12 மணிக்கு மேற்கொள்ளப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 60 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

ஆட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

மேலும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

அத்துடன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 295 ரூபாவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்பட்ட விலைத் திருத்தத்திற்கு அமைவாக தமது நிறுவனம் விலைகளை மீளாய்வு செய்து வருவதாக இலங்கை I.O.C நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று இரவு முதல் இரு நிறுவனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஒரே விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு ஏற்படுத்திய தொழிற்சங்க தலைவர்கள் உட்பட 20 பெற்றோலிய ஊழியர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

நிகழ்காலத்துக்கு ஏற்ற கல்வி முறையை உருவாக்குவேன் – ஜனாதிபதி ரணில்

videodeepam

குளத்தில் படகொன்று கவிழ்ந்து விபத்து – காணாமல் போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்பு

videodeepam

பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியை சந்தித்தார்

videodeepam