கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஏற்பாட்டில் தொழிநுட்ப துறை மாணவர்களுக்கான செயன்முறை பயிற்சி செயலமர்வு இன்று (27) கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
ககழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் என் .பிள்ளை நாயகத்தின் அறிவுறைக்கமைய தொழில்நுட்ப துறைக்கு பொறுப்பான உதவி கல்வி பணிப்பாளர் எஸ் .சகித் இன் மேற்பார்வையில் உயிர் முறைமை தொழிநுட்பவியல் மற்றும் பொறியியல் முறை தொழில்நுட்பவியல் மாணவர்களுக்காகவும் இந்த செயலமர்வு இன்றும் நாளையும் (28) நடைபெற உள்ளது.
திருகோணமலை மாவட்டத்திற்தில் தொழிநுட்ப துறையில் பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களும் இதன்போது கலந்து கொள்ள உள்ளனர்
இந்நிகழ்வில் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சி பெற்ற வளவாளர்கள் பயிற்சியினை முன்னெடுத்துச் செல்கின்றனர்
கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் ஏ .நசுகர்கான் தொழில்நுட்ப பாட பிரிவு உதவி கல்வி பணிப்பாளர் ஏ. எம். நிஜாமுதீன் கிண்ணியா அல் அக்சா தேசிய பாடசாலையின் அதிபர் ஏ எம் எம் சலீம் உள்ளிட்ட பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் வளவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கான செயலமர்வினை ஆரம்பித்து வைத்தனர்