deepamnews
இலங்கை

பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேர் அதிரடியாக கைது!

பதுளை – எல்ல பிரதேசத்தின் ‘ரொக்’ என்ற இடத்தின் சுமார் ஐந்து ஏக்கர் வனப்பகுதிக்கு தீவைத்தமை தொடர்பில், 16 மாணவர்களை எல்ல பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (26) மாலை குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பதுளை பகுதியிலுள்ள பிரபல தமிழ்ப் பாடசாலை மாணவர்கள் 16 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் பதுளையிலிருந்து எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போதே, வனத்துக்கு தீ வைத்துள்ளமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் கைது செய்யபட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

Related posts

அடுத்த தேர்தலில் பரந்த கூட்டணியுடன் களமிறங்கும் ஜனாதிபதி ரணில்

videodeepam

அடுத்த வருடத்திற்கான பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்களை 30% சலுகை விலையில் வழங்க நடவடிக்கை..

videodeepam

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து – நதாஷா எதிரிசூரியவுக்கு விளக்கமறியல்!

videodeepam