அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்காக, உள்நாட்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுவதற்கான செயல்முறையை அரசாங்கம் தற்போது ஆய்வு செய்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக, தென்னாபிரிக்கா, பொலிவியா, அர்ஜென்டினா மற்றும் சிலி போன்ற நாடுகளில் உள்ள மாதிரிகள் ஆய்வு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவைப்பட்டால், இதற்காக நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்றவும் அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
போர்க்காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்காக, உள்நாட்டு உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை நிறுவுவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் வாக்குறுதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.