deepamnews
இலங்கை

டிசெம்பருக்குள் நிதி உதவி கிடைப்பது நிச்சயமில்லை –  சர்வதேச நாணய நிதியம் தெரிவிப்பு

எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் கடன் நிவாரண உதவியைப் பெற முடியும் என்று, இலங்கை அரசாங்கம் நம்புகின்ற போதும், அது நிச்சயமானதல்ல என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையுடனான கலந்துரையாடல்கள் ஆரோக்கியமானதாக  காணப்படுகின்ற போதிலும், கடன் நிவாரணம் குறித்த கலந்துரையாடல்களில் தீர்மானம் எடுக்க அதிக காலம் எடுக்கும் என்பதால், இலங்கைக்கு நிவாரணம் வழங்கும் காலக்கெடுவைக் கணிப்பது கடினம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அத்துடன்  இந்தச் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பினரும் விரைவாக தீர்மானம் எடுக்கும் பட்சத்தில்  இலங்கை நெருக்கடியிலிருந்து விரைவாக மீளமுடியும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூவர் மற்றும் இலங்கை தலைவர் மசாஹிரோ நோசாகி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாணய நிதியச் சபையின் அனுமதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து இலங்கை அரசாங்கம் முழு ஈடுபாட்டுடன் செயற்படுகின்றது. 

ஆனால் பல்தரப்பு கடன் வழங்குநர்கள்  காலக்கெடு நிச்சயமற்றதாக இருப்பதாகவும், எனவே அவர்களுடன் முன்னெடுக்கும் கலந்துரையாடல்களிலேயே இவை தங்கியுள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச

videodeepam

பிராந்திய சுகாதார பணிமனை கட்டட விவகாரம் – கடிதத்தை மீளப் பெறுகிறோன் பணிப்பாளர் சத்தியமூர்தி.

videodeepam

இலங்கைக்கு எதிரான சனல் 4 காணொளி மேற்கத்திய நிகழ்ச்சி நிரலின் வெளிப்பாடு – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு.

videodeepam