deepamnews
Uncategorized

உடனடியாக உதவி தேவைப்படும் 54 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கும்

உடனடியாக உதவி தேவைப்படும் 54 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியுள்ளதாக ஐ.நா தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகளாவிய நெருக்கடிகள் காரணமாக இலங்கை உட்பட 54 நாடுகள் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு உடனடியாக கடன் நிவாரணம் தேவைப்படுகிறது என்றும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் குறிப்பிட்டுள்ளது.

“பல மூன்றாம் உலக நாடுகள் மிகவேகமாக தீவிரமடையும் கடன்நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மோசமான விளைவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

உடனடி கடன் நிவாரணம் இல்லாதபட்சத்தில் 54 நாடுகளில் வறுமை நிலை அதிகரிக்கலாம்.

காலநிலையை தழுவுதல், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளை தணிப்பது போன்ற விடயங்களில் இந்த நாடுகளிற்கு உடனடி முதலீடுகள் தேவைப்படுகின்றன.

பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக் கூடிய நாடுகளும் உள்ளன.

தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கப்படுகின்ற போதிலும் இதுவரை சிறிதளவு நடவடிக்கைகள் கூட எடுக்கப்படவில்லை, ஆபத்துக்கள் அதிகரிக்கின்றன.

இந்த நெருக்கடி தீவிரமடைந்து உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் ஒரு வேரூன்றிய வளர்ச்சி நெருக்கடியாக பரவும் ஆபத்துள்ளது.

வறிய கடனாளி நாடுகள் ஒன்றிணைந்து வரும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்கின்றன.

கொவிட் பெருந்தொற்றுக்கு முன்னரே  பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் கடன் நெருக்கடி உருவாக தொடங்கியிருந்தது.

கடந்த தசாப்தத்தில் கடன் துரிதமாக அதிகரித்து வந்துள்ளமை தொடர்ச்சியாக குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது” எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.

Related posts

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – யாழ். இந்து மகளிர் பாடசாலை மாணவி மாவட்டத்தில் முதலிடம் பிடித்துச் சாதனை.

videodeepam

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் கூட்டத்தில் மோதல் – 7 பேர் கைது!

videodeepam

டீல்’ பேசி நாட்டுக்குள் வந்த கைப்பிள்ளை கஜேந்திரன்  – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு.

videodeepam