deepamnews
இலங்கை

புத்தளத்தில் கரையொதுங்கும் டொல்பின்கள்

புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் உயிரிழந்த நிலையில் இரண்டு டொல்பின்கள் கரையொதிங்கியுள்ளது. அத்துடன், இரண்டு டொல்பின்கள் உயிருடன் மீட்கப்பட்டு ஆழமான பகுதியில் மீனவர்களினால் விடுவிக்கப்பட்டது.

புத்தளம் வண்ணாத்திவில்லு திருக்கப்பல்லம் பகுதியில் இரண்டு டொல்பின்கள் நேற்று (16) காலை உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியுள்ளது. குறித்த டொல்பின்கள் வலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

உயிரிழந்த டொல்பின்களுக்கு மிருக வைத்தியர் எச்.கே. இசுருவினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. 7 அடி நீளம் கொண்ட டொல்பினொன்றும் 4 அடி நீளம் கொண்ட டொல்பினொன்றுமே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தது.

இதேவேளை புத்தளம் வண்ணாத்திவில்லு கல்லடி களப்பின் கரையோரத்தில் இரண்டு டொல்பின்கள் அப்பகுதி மீனவர்கள் உயிருடன் பாதுகாப்பாக மீட்டனர். அத்துடன் உயிருடன் மீட்கப்பட்ட குறித்த இரண்டு டொல்பின்களும் படகில் சென்று ஆழமான பகுதியில் விடுவித்தனர்.

Related posts

ஆசியாவின் சிறந்த விமான மற்றும் கடற்படை கேந்திர நிலையங்களில் ஒன்றாக இலங்கையை மாற்றுவோம் – ஜனாதிபதி

videodeepam

ஐக்கிய அரபு இராச்சியத்தின் காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

videodeepam

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கும் இணங்க போவதில்லை – பொதுஜன பெரமுன அறிவிப்பு

videodeepam