இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக முதன்முறையாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக போட்டியிடுவார் என Penny Mordaunt க்கு 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமை காரணமாக அவர் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.
இதனை அடுத்து ஆளும் கொன்சவேட்டிவ் கட்சியின் புதிய தலைவராகவும், அடுத்த பிரதமராகவும் ரிஷி சுனக் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், அவர் விரைவில் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரிஷி சுனக் கடந்த 2009-இல் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைத் திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இங்கிலாந்தில் 730 மில்லியன் பவுஸ்ட்ண் சொத்துக்களுடன் முன்னணி தனவந்த தம்பதிகளாக கருதப்படுகின்றனர்.
இந்தநிலையில். ரிஷி சுனக் முதலாவது இந்திய வம்சாவளி, இந்து மற்றும் ஆசிய நாட்டைச் சார்ந்த இங்கிலாந்தின் பிரதமராக வாகை சூடியுள்ளார்.