இலங்கையில் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் ஜனாதிபதி செயலகத்தின் முன் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மின் விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அண்மையில், நடைபெற்ற இந்துக்களின் பூஜை வழிபாடுகளில் ஒன்றான நவராத்திரி விழா, அதிபர் சார்பாக ஏற்பாடு செய்யப்படாமை தொடர்பாக இந்து மதம் சார்ந்தவர்களினால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அது தொடர்பாக, அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துச் சென்றிருந்ததுடன், தீபாவளிப் பண்டிகையை அதிபர் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.