deepamnews
இலங்கை

இலங்கையில் உச்சம் தொட்டுள்ள மரக்கறிகளின் விலை

இலங்கை சந்தைகளில் மரக்கறிகளின் விலை நாளுக்கு நாள் தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பேலியகொட மெனிங் சந்தை நிலவரப்படி பொதுச்சந்தைகளில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம் 280 முதல் 300 ரூபா வரையிலும், ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கு 330 ரூபாவாகவும், நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில் 480 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றது.

நாரஹேன்பிட்டி பொருளாதார நிலையத்தில். ஒரு கிலோகிராம் கரட் 420 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போன்சி 520 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கோவா 360 ரூபாவாகவும்,

ஒரு கிலோகிராம் கத்தரிக்காய் 400 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பூசணி 280 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 400 ரூபாவாகவும்,

தேசிக்காய் ஒரு கிலோகிராம் 800 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் தக்காளி 440 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாட்டின் முக்கிய சேவைக் கட்டணங்கள் குறைப்பு – பொருட்களின் விலை குறையும் சாத்தியம்

videodeepam

சஜித்துக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என்ற செய்தி பொய்யானது – மனோ கணேசன் தெரிவிப்பு

videodeepam

எரிபொருள் கையிருப்பு உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  அறிவிப்பு

videodeepam