deepamnews
இலங்கை

எரிபொருள் கையிருப்பு உள்ளது – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  அறிவிப்பு

நாட்டில் போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

1 இலட்சம் மெட்ரிக் தொன் டீசலும் 50,000 மெட்ரிக் தொன் பெட்ரோலும் கையிருப்பில் உள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்தார்.

அத்துடன், பெட்ரோல் ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை அண்மித்துள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து எந்த வகையிலும் அச்சம் கொள்ளத் தேவையில்லையென அவர் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே, இன்று விடுமுறை தினம் என்பதால், நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நேற்றும்  நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை அண்மித்து நீண்ட வரிசைகளை அவதானிக்க முடிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

13 ஆம் திருத்தத்தை எதிர்க்கும் மகாநாயக்க தேரர்களுக்கு சி.வி. விக்னேஸ்வரன் கடிதம்

videodeepam

20 நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாவில் நிறைவேறியது தீர்மானம்

videodeepam

22 ஆவது திருத்தச் சட்டமூலத்தில் 2 திருத்தங்களை செய்யவே இணக்கம் – அமைச்சர் விஜயதாச

videodeepam