deepamnews
இலங்கை

20 நாடுகளின் ஆதரவுடன் ஜெனிவாவில் நிறைவேறியது தீர்மானம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பாக அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்ட, A/HRC/51 தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏழு அனுசரணை நாடுகளின் சார்பில் பிரித்தானியா சமர்ப்பித்த இந்த தீர்மானம் மீது ஜெனிவா நேரப்படி நேற்று பிற்பகல் இடம்பெற்ற வாக்கெடுப்பில், 20 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன.

ஏழு நாடுகள் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துள்ளன.

ஏனைய 20 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்துள்ளன.

ஆர்ஜென்ரீனா, ஆர்மீனியா, செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஹொண்டுராஸ், லிதுவேனியா, லக்சம்பர்க், மலாவி, மார்ஷல் தீவுகள், மெக்சிகோ, மொன்ரெனீக்ரோ, நெதர்லாந்து, பராகுவே, போலந்து, தென் கொரியா, உக்ரைன், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள், ஆதரவாக வாக்களித்துள்ளன.

இலங்கைக்கு ஆதரவாக, பொலிவியா, சீனா, கியூபா, எரித்ரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுவேலா ஆகிய ஏழு நாடுகள், தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன.

பெனின், பிரேசில், கமரூன், ஐவரிகோஸ்ட், காபோன், கம்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கசகஸ்தான், லிபியா, மலேசியா, மொரிட்டானியா, நமீபியா, நேபாளம், கட்டார், செனகல், சோமாலியா, சூடான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 20 நாடுகள் தீர்மானத்தின் போது நடுநிலை வகித்துள்ளன.

Related posts

அலுவலக மலசலகூடத்தில் சடலம் மீட்ப்பு.

videodeepam

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணிப்பாளர்களுக்கு தடை.

videodeepam

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையே சந்திப்பு

videodeepam