deepamnews
இலங்கை

இணைத் தலைமைக்கு இணங்கவில்லை –ஜனாதிபதி ரணிலின் அறிவிப்புக்கு ஜப்பான் மறுப்பு

இலங்கையின் கடனாளிகளுடன் கடன் மறுசீரமைப்பு குறித்த பேச்சுக்களை நடத்தும், உச்சி மாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்குவதற்கு இன்னும் எந்த உடன்பாட்டையும் எட்டவில்லை என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில், கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் ஜப்பான் இலங்கைக்கு உதவ முன்வந்திருப்பதாகவும், கடன் வழங்கும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான, உச்சிமாநாட்டிற்கு இணைத் தலைமை தாங்குவதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

எனினும், டோக்கியோவில் உள்ள ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவரை இதனை நிராகரிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார்.

“நாங்கள் அத்தகைய உடன்பாட்டை எட்டவில்லை. இது இலங்கையின் விருப்பமான சிந்தனையாக இருக்கலாம், ஆனால் நிலைமை மாறாமல் உள்ளது” என்று இதுகுறித்து விபரம் அறிந்த ஜப்பானிய அரசாங்க அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்மொழிந்திருக்கும் வேலைத்திட்டங்கள் – ஜனாதிபதி அறிவிப்பு

videodeepam

பம்மிங் வீதியில் முகமாலையில் விபத்தில் காயமடைந்தவர் மரணம்!

videodeepam

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட சலுகை!

videodeepam