deepamnews
இந்தியா

66 குழந்தைகளின் மரணத்துக்கு காரணமான சளி மற்றும் இருமல் மருந்து குறித்து விசாரணையை தொடங்கியது இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்தினால், காம்பியாவில் 66 குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விடுத்த எச்சரிக்கை குறித்து இந்தியா விசாரணைகளை நடத்தி வருகிறது.

ஹரியானாவின் சோனிபட் பகுதியில் செயற்படும் மெய்டன் என்ற மருந்து நிறுவனம், குழந்தைகளுக்கான சளி மற்றும் இருமலுக்கான திரவ மருந்தினை தயாரித்து, காம்பியாவுக்கு  ஏற்றுமதி செய்துள்ளது.

காம்பியாவில் உடல்நலக்குறைவால் 66 குழந்தைகள் இறந்ததற்கு, ஹரியானாவில் தயாரான சளி மருந்துகள் காரணமாக இருக்கலாம் உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்தது.

அந்த மருந்தில், ஏற்றுக்கொள்ள முடியாதளவு டெத்லின் கிளைகோல் மற்றும் எத்திலின் கிளைக்கோல் இருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.

 உலக சுகாதார அமைப்பு, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பிடம்  இதுகுறித்து முறைப்பாடு செய்துள்ளதாகவும், உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இந்திய வான்பரப்புக்குள் திடீரென நுழைந்த பாகிஸ்தான் விமானத்தினால் பரபரப்பு!

videodeepam

உலகின் மிகப்பழமையான மொழியான தமிழ் – இந்திய பிரதமர் மோடி பெருமிதம்

videodeepam

சினிமா புகழைக் கொண்டு முதலமைச்சர் ஆகலாம் என சில நடிகர்கள் நினைக்கின்றனர் – திருமாவளவன் தெரிவிப்பு.

videodeepam