பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு, (Annie Ernaux ) இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசை, இந்த ஆண்டு பெறுவோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
நேற்று, இலக்கியத்திற்கான நோபல் பரிசு, பிரான்சை சேர்ந்த பெண் எழுத்தாளர் ஆனி எர்னாக்சுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலினம் மற்றும் மொழி தொடர்பாக சமத்துவத்தை வலியுறுத்தியதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஆனி எர்னாக்ஸ் 30க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.