deepamnews
இலங்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

இதன்போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம் இந்த ஆண்டு செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு வழங்கப்படவுள்ளது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 36 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்றைய தினம் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது. பல்கலைக்கழக வேந்தர் வாழ்நாள் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இன்று முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி சனிக்கிழமை வரை மூன்று நாள்களில் எட்டு அமர்வுகளாக பட்டமளிப்பு விழா இடம்பெறவுள்ளது. இந்தப் பட்டமளிப்பு விழாவில் 2 ஆயிரத்து 378 பேர் பட்டங்களையும் தகைமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

கொரோன கட்டுப்பாட்டு தளர்வுகளை தொடர்ந்து கடந்த இரண்டு வருடங்களின் பின்னர் இம்முறை பட்டமளிப்பு விழாவுக்கு வழமைபோன்று பட்டம் பெறும் மாணவர்களுடன், பெற்றோரும் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இந்த ஆண்டு புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜா ரமேஸ் மதுசங்கவிற்கு நாளைய தினம் அமர்வின் போது வழங்கப்படவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடக மாணவனாகவும் ஊடகவியலாளராகவும் பணியாற்றிக் கொண்டிருந்த நிலக்சன் 2007 ஆம் ஆண்டு ஆவணி மாதம் முதலாம் திகதி அவரது வீட்டில் வைத்து பெற்றோர் முன்னிலையில் ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

நிலக்சனது ஞாபகார்த்தமாக அவருடன் யாழ் இந்துக்கல்லூரியில் ஒன்றாய்க் கற்ற 2004 உயர்தர மாணவர்களால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவின் போது ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தங்கப்பதக்கத்தை அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்தமாக வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இதன்மூலம் அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு மொனராகலை மரகலை தோட்டத்தைச் சேர்ந்த அமரர் செல்வி நவரத்னம் தில்காந்திக்கு ஏகாந்த நிலையில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோதுமை மா இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

videodeepam

நாட்டில் ஸ்திரத்தன்மையை உருவாக்க சரியான தகவல்களை மக்களுக்கு வழங்க வேண்டும் – ஜனாதிபதி

videodeepam

உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபா செலவாகும் என எதிர்பார்ப்பு

videodeepam