deepamnews
இலங்கை

கோதுமை மா இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

கோதுமை மா இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று (25) வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அத்தோடு ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு அமைச்சின் செயலாளர் பாதுகாப்பு எஸ்.டி. கொடிகார நேற்று (24) தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரினால் வர்த்தமானி வெளியிடப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தலைவரின் கருத்து
மேலும் இது தொடர்பில் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறுகையில் “ஒரு கிலோ மாவின் விலையை 20 ரூபாவாக குறைத்தால் 250 அல்லது அதற்கும் குறைவாக ரொட்டியின் விலை குறைக்கப்படலாம்” என கூறியுள்ளார்.

Related posts

அரச அச்சகம் திறைசேரிக்கு மீண்டும் கடிதம் –  நிதியை விரைவாக வழங்குமாறு கோரிக்கை

videodeepam

தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக நல்லிணக்கத்திற்கான சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி உறுதி 

videodeepam

உயர்தர பரீட்சைக் காலத்தில் மின் துண்டிப்பு – மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு நிராகரிப்பு

videodeepam