deepamnews
இலங்கை

தலைமன்னார் ஊடாக இந்தியா செல்ல முயற்சித்த சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில் இவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (6-10-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (28) புதன்கிழமை மாலை உத்தரவிட்டார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (27) இரவு தலைமன்னார் கடல் ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்திய செல்ல முயன்றுள்ளனர்.

இதன் போது கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது குறித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்களும் பெண் ஒருவரும் 3 சிறார்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

திருகோணமலையை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த 6 பேரையும் கடற்படையினர் விசாரணைகளின் பின்னர் நேற்று (28) காலை தலைமன்னார் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தலை மன்னார் பொலிஸார் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர்களை நேற்று (28) மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட இரண்டு ஆண்களும் பெண் ஒருவரையும் எதிர்வரும் 6ஆம் திகதி வரை(06-10-2022) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

ஏனைய 18 வயதுக்கு குறைந்த மூன்று சிறுவர்களையும் சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

Related posts

ஜெனிவாவில் இலங்கை இன்று கூனிக்குறுகி நிற்க ராஜபக்சக்களே முழுக்காரணம்

videodeepam

பெற்றோல் வாகன இறக்குமதிக்கு தடை – மின்சார கார்களை மட்டுமே அனுமதி என்கிறார் அமைச்சர் மனுச  

videodeepam

இரட்டை குடியுரிமைக்கான விண்ணப்பம் உள்ளிட்ட விசா கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு

videodeepam