deepamnews
இலங்கை

காணிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம்,தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் பல வருட காலமாக குடியிருப்பு காணிக்கான அனுமதிப்பத்திரமின்றி வாழ்ந்து வந்த நிலையில் அதனை பெற விண்ணப்பித்தோர்களுக்கான காணி பத்திரங்கள் (28) மாலை பிரதேச செயலக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இடம் பெற்ற இவ் அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் 74 அனுமதிப் பத்திரங்களும், 30 உறுதிப் பத்திரங்களும் இதன் போது வழங்கப்பட்டன. மக்களுக்கான தேவையறிந்து காணி பத்திரங்களுக்காக விண்ணப்பித்தவர்ளுக்கு காணி கிளை மூலமான இச் சேவை துரிதமாக இடம் பெற்று வருகின்றது.

இதில் மாகாண காணி ஆணையாளர் டி.எம்.ஆர்.சி.தசநாயக்க, மாகாண காணி உதவி ஆணையாளர் ஜீ.ரவிராஜன், உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், நிருவாக உத்தியோகத்தர் உடகெதர, பிரதம முகாமைத்துவ உதவியாளர் மஹிந்த வனசிங்க உட்பட காணிக் கிளை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் நிவாரணம் இல்லை –  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

videodeepam

பாலர் பாடசாலையில் மதச் செயற்பாடு – பிரதேச செயலகத்தின் தலையிட்டால் நிறுத்தம்

videodeepam

இலங்கையின் வரலாற்றை ஆய்வு செய்வதற்காக புதிய நிறுவனம் ஒன்று விரைவில் ஸ்தாபிக்கப்படும் – ஜனாதிபதி 

videodeepam