deepamnews
இலங்கை

யாழில் வன்முறை கும்பல் அட்டகாசம் – சிறுவன் படுகாயம்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் சிறுவன் மீது வன்முறை கும்பல் ஒன்றினால் வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

இந் நிலையில் படுகாயமடைந்த யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவத்தில் உரும்பிராய் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மனோஜ் (வயது 17) எனும் சிறுவனே படுகாயமடைந்துள்ளான். குறித்த சிறுவன் பாடசாலை கல்வியை இடை நிறுத்தி , இணுவில் பகுதியில் உள்ள அலங்கார பொருட்கள் விற்பனையகம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறான்.

நேற்றைய தினம் (திங்கட்கிழமை)வாலை முடிந்து சிறுவன் , தனது துவிச்சக்கர வண்டியில் வீடு நோக்கி செல்லும் போது, தெல்லிப்பளை பகுதியில் இருந்து மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் சிறுவனை வழி மறித்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Related posts

அரிசி வகைகளை இறக்குமதி செய்வதற்கு தடை

videodeepam

சிறுவர்களின் திறன் விருத்திக்கு சிறுவர் சந்தை உதவுகிறது – இராமநாதன் கல்லூரி முன்னாள் அதிபர் தெரிவிப்பு!

videodeepam

நந்தலால் வீரசிங்கவின் கருத்து திரிபுபடுத்தப்படுகிறது:  மத்திய வங்கி அறிக்கை

videodeepam