ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலில்லை, வரி மேல் வரி விதிப்பை மக்களால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்.
மக்களுக்காக அரசாங்கம் என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் எவ்வித பதிலுமில்லை.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை அரசாங்கம் முழுமையாக புறக்கணித்துள்ளது,நடுத்தர மக்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் உள்வாங்கப்படவில்லை. என்றும் அவர் தெரிவித்துள்ளார் .