2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற சபை நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்துடன் தொடர்புடைய ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இன்றைய வாக்கெடுப்பின் போது வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
இன்றைய வாக்கெடுப்பில், ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பிற்கு எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன.
வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடந்த 14 ஆம் திகதி பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டது.