deepamnews
இலங்கை

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிட இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புராதன இடங்களைப் பார்வையிடுவதற்காக அதிகளவான இந்தியர்கள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை மட்டும் மொத்தம் 78 இந்திய பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர்.

ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைத் தவிர, வேறு இந்து மதத் தலங்களுக்கும் இந்த பயணிகள் செல்ல விரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 800 இந்திய சுற்றுலாப் பயணிகள் அடுத்த ஆறு மாதங்களில் குழுக்களாக நாட்டிற்கு வருகைத்தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையில் பாரிய நிலநடுக்கங்கள்: சுரங்கப்பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

videodeepam

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தல்

videodeepam

படிப்படியாக வலுவிழக்கும் தாழமுக்கம் – நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம்

videodeepam