சீனா, இலங்கைக்கு நன்மை தரும் வகையில் எதனை செய்துள்ளது என்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் இந்த கேள்வியை நேற்று எழுப்பினார்.
இலங்கையை, சீனா கடன் பொறிக்குள் தள்ளவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சாப்ரி கூறியதை அடுத்து, அதற்கு சீன தூதரகத்தின் பேச்சாளர் நன்றி தெரிவித்திருந்தார்.
இதனை தமது நாடாளுமன்ற உரையின்போது விமர்சித்த சாணக்கியன், சீனா, இலங்கைக்கு நன்மை செய்யவில்லை. தமது நாட்டின் நலனுக்காகவே அது இலங்கையை பயன்படுத்தி வருகிறது என்று குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கே சீனா நண்பராக இருக்க முடியும். இலங்கைக்கு நண்பர் அல்ல.
மஹிந்த ராஜபக்சவுக்கு நண்பர் என்பதால், கோட்டாபயவின் சட்டத்தரணியான அலி சாப்ரியும் சீனாவை நண்பர் என்று கூறியுள்ளதாக சாணக்கியன் குறிப்பிட்டார்.
அவ்வாறு நண்பராக இருக்குமாக இருந்தால், ஏன் சீனா, சர்வதேச நாணய நிதிய மறுசீரமைப்பு திட்டத்துக்கு இன்னும் உடன்படவில்லை என்று சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
ஜெனீவாவின் மனித உரிமைகள் பேரவையில் சீனா,இலங்கைக்கு ஆதரவு வழங்குதைக் கொண்டு அதனை நண்பராக கருதமுடியாது என்று சாணயக்கியன் குறிப்பிட்டார்.