deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைகளை பிற்போடுவதற்கு அரசாங்கம்  சதி திட்டம் அரசாங்கம் – அனுரகுமார திசாநாயக்க குற்றச்சாட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைகளை பிற்போடுவதற்கான சதிச்சூழ்நிலைகளை அரசாங்கம் ஏற்படுத்தி வருவதாக நாடாளுமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

சட்டத்தின்படி, சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு, எதிர்வரும் 2023 மார்ச் 20ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்த வேண்டும்.

இதற்கான அனைத்து உரிமைகளும் அந்த ஆணைக்குழுவுக்கு உள்ளது.

எனினும் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை கோரியிருக்கிறார்.

இது, ஏற்புடையதல்ல. தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்து அதிகாரங்கள் இருந்தும்கூட, ஆணையாளரின் செயற்பாடு,சந்தேகத்துக்குரியதாக அமைந்துள்ளது.

எனவே அவரை சுயாதீனமான செயற்படும் ஒரு ஆணையாளராக கருதமுடியாது என்றும் அனுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அடிக்கடி நாடாளுமன்றுக்கு ஓடி வந்த பதில்களைக் கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இது தொடர்பிலும் பதிலை வழங்கவேண்டும் என்று அனுரகுமார கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இ.தொ.கா.விற்கும் இடையில் கலந்துரையாடல்!

videodeepam

10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று கலப்பின சூரிய கிரகணம்

videodeepam

உலகிலேயே மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம், இஸ்ரேஸ் 5 ஆம் இடத்தில்.

videodeepam