deepamnews
இலங்கை

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் சில விமானங்களை கொள்வனவு செய்ய திட்டம்

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளமை தொடர்பில் தகவல் வெளிவந்துள்ளது.

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு  குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள 6 அல்லது 7 விமானங்களின் காலம் நிறைவடைகின்றமையினால், புதிதாக குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.

அடுத்த மூன்று மாதங்களில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மூலம் சிறப்பான சேவையை வழங்கவுள்ளதாக நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா விமான நிலையத்திற்கு சொந்தமாக எந்தவொரு விமானமும் இல்லை என தெரிவித்த அமைச்சர், அனைத்து விமானங்களும் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டவை எனவும் அவ்வாறான 24 விமானங்கள் உள்ளதாகவும் கூறினார்.

Related posts

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை

videodeepam

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் மீண்டும் இன்று சந்திப்பு

videodeepam

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை – எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு

videodeepam