அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என விவசாயத் துறை மற்றும் வனவளப்பாதுகாப்பு சார் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டுக்கு தேவையான அரிசியை உள்நாட்டு விவசாயிகள் உற்பத்தி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் அரிசி இறக்குமதி உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இதனூடாக உள்நாட்டு நெல்லின் விலை அதிகரிக்கும்.
தற்போது, வெளிநாட்டிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டாலும் விலை குறைவடையவில்லை.
அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லை கொள்வனவு செய்வதை விடுத்து அரிசியை களஞ்சியப்படுத்துகின்றனர்.
இந்த விடயத்தில் அனைவரும் உரிய முறையில் செயற்பட வேண்டும்.
அத்துடன் இந்த முறை பெரும் போகத்திற்கு அதிக விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2022 – 2023 பெரும்போகத்துக்காக 7 லட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளதாக பதலகொட நெல் ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது விவசாய நடவடிக்கை இடம்பெறும் மொத்த நிலப்பரப்பில் 75 சதவீதமானது என அதன் நெல் விவசாயம் தொடர்பான பிரதான விசேட நிபுணர் கே.ரோஹன திலக்கசிறி தெரிவித்துள்ளார்.