சீனாவுடனான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை தாமதமானதற்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றமையே காரணம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மாநாடு நிறைவடைந்துள்ளதால், பேச்சுவார்த்தைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
அடுத்த வருடம் சீனாவுடனான கடனை மறுசீரமைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, இலங்கையுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவிற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்தார்.
இதன் பிரகாரம், அடுத்த வருடம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து ஊழியர் மட்ட கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
கொழும்பில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை கூறினார்.
2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில், வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.