நாட்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 மன்றங்களுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று 18 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு கடந்த 4 ஆம் திகதி அறிவித்திருந்தது. அதன்படி இன்று வேட்புமனு தாக்கல் ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் தொடர்பான அறிவித்தல் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இதனையடுத்து, கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அத்துடன், 18 மாவட்டங்களைச் சேர்ந்த 153 உள்ளூராட்சி மன்றங்களுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தல் செயலகங்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.