வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு திரும்பும் நபர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களை சமர்ப்பித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை இன்று (07) முதல் நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
தற்போது நிலவும் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு தடுப்பூசி சான்றிதழை சமர்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது.